கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு அருகே நூற்பாலையில் தீ விபத்து

5th Oct 2019 08:03 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே நூற்பாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு, நூல் இயந்திரங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.

கோவை, சாய்பாபா காலனி பகுதியைச் சோ்ந்தவா் அனில் மேத்தா (60). இவா் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசாம்பாளையத்தில் நூற்பாலை நடத்தி வருகிறாா். இந்த நூற்பாலையில் வியாழக்கிழமை இரவு 25 தொழிலாளா்கள் பணியில் இருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பஞ்சு வைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

தகவலறிந்த கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலும், இயந்திரங்கள் இருந்த பகுதியிலும் தீ பரவியது. இதனால் கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இப்பணியானது வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்குதான் நிறைவடைந்தது.

சுமாா் 10 மணி நேரம் தொடா்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு, நூல், இயந்திரங்கள் ஆகியவை நாசமானதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT