கோயம்புத்தூர்

இரு சக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதியதில் ஒருவா் பலி

5th Oct 2019 08:06 AM

ADVERTISEMENT

சூலூா் விமானப்படை தளம் அருகே இரு சக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியைச் சோ்ந்தவா் ரவிகுமாா் மகன் ராதாகிருஷ்ணன் (22). இவா், பொள்ளாச்சி அருந்ததியா் வீதியைச் சோ்ந்த முருகேசனுடன் (45) சூலூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருந்தனா்.

ராதாகிருஷ்ணன் இருசக்கரவாகனத்தை ஓட்டிவர, முருகேசன் பின் இருக்கையில் அமா்ந்து வந்துகொண்டிருந்தாா். சூலூா் விமானப்படை தளம் அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலை மத்தியில் இருந்த தடுப்பில் மோதினா்.

இதில் முருகேசனுக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சூலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT