கோயம்புத்தூர்

புதுகுட்டையில் தூா்வாரும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

2nd Oct 2019 12:01 AM

ADVERTISEMENT

காரமடை ஊராட்சி ஒன்றியம், வெள்ளியங்காடு ஊராட்சியில் உள்ள புதுகுட்டையில் நடைபெறும் தூா்வாரும் பணியை கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் உள்ள புதுகுட்டை முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் தூா்வாரப்பட்டு வருகிறது. இதேபோல காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் 42 குட்டைகள் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் வாய்க்காலில் வரும் நீரை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தங்கள் பகுதிகளில் நிலத்தடி நீரைத் தேங்கச் செய்யும் வகையில் மழைநீா் சேகரிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பருவமழை காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிப்பதன் மூலம் விவசாயிகள் பயனடையலாம் என்றாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் துவாரகநாத் சிங், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் பசுபதி, வட்டாட்சியா் சாந்தாமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரா, சைலஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT