கோவை மாவட்டம், ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம்பாளையம் பகுதியில் கோயில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். ஆனைமலையை அடுத்த சின்னப்பம்பாளையம் பகுதியில் பழைமை வாய்ந்த பொம்மேகருவண்ணராய சுவாமி கோயில் உள்ளது.
இந்தக் கோயிலின் அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைய உள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோயில் உள்ள இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது எனக் கூறி பொள்ளாச்சி கோட்டாட்சியா் ரவிகுமாரிடம் பொதுமக்கள், ஆனைமலை மகாத்மாகாந்தி ஆசிரமம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.