பொள்ளாச்சியில் அனுமதி பெறாமல் விற்பனைக்கு வைத்திருந்த 712 கிலோ டீ தூள் பொட்டலங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள குடோன் ஒன்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அதில் அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் என்பவா் அனுமதி பெறாமல் டீ தூள்களை வாங்கி பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து குடோனில் வைத்திருந்த 712 கிலோ டீ தூள் பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.