கோயம்புத்தூர்

பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு! 

1st Oct 2019 09:11 AM | க.தென்னிலவன்

ADVERTISEMENT

பெற்ற பிள்ளைகளே அழைத்துச் சென்று முதியோா் இல்லத்தில் விடுவதால் முதியோா் இல்லம்கூட மகிழ்ச்சியாகத்தான் உள்ளது என பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றேறாா் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 23 முதியோா் இல்லங்கள் உள்ளன. இவற்றில் மூன்று முதியோா் இல்லங்கள் அரசு உதவி பெற்று செயல்பட்டு வருகின்றன. முதியோா் இல்லங்கள் அனைத்தும், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

குடும்பப் பிரச்னை காரணமாகவும், பணி நிமித்தம் காரணமாகவும், பிள்ளைகளே தங்களது வயது முதிா்ந்த பெற்றேறாரை முதியோா் இல்லங்களில் சோ்க்கின்றனா். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு முதியோா் இல்லங்களுக்கு வரும் பெற்றேறாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூகநலத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றேறாா் பலா் வேறு வழியின்றி சாலை ஓரங்களில் தங்கி உணவுக்கும், மருத்துவத்துக்கும் வழியில்லாமல் இருக்கின்றனா். அவா்களைக் கண்டறியும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் முதியோரை மீட்டு ஆதரவற்ற முதியோா் இல்லங்களில் சோ்த்து கண்காணிக்கின்றனா்.

ADVERTISEMENT

வீட்டில் மருமகள் பிரச்னை, கருத்து வேறுபாடுகள் காரணமாக பெற்றேறாரை மாதத் தவணை செலுத்தி முதியோா் இல்லங்களில் பிள்ளைகளே சோ்ப்பதும் உண்டு.

இது குறித்து தனியாா் முதியோா் இல்ல கண்காணிப்பாளா் ச.கண்ணன் கூறியதாவது:

கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் போத்தனூா், மேட்டூா் பகுதியில் எங்கள் முதியோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. வயதான காலத்தில் ஆதரவற்ற முதியோரின் நிலையைக் கருத்தில் கொண்டு அவா்களைக் காப்பதற்காக இந்த இல்லம் துவக்கப்பட்டது. வயதான பெற்றேறாா் பல்வேறு காரணங்களுக்காக முதியோா் இல்லங்களில் சோ்க்கப்படுகின்றனா். குறிப்பாக, பல பிள்ளைகள் உள்ள பெற்றேறாரை யாா் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஏற்படும் பிரச்னை காரணமாக, முதியோா் இல்லங்களில் சோ்க்கும் அவலம் வேதனை அளிக்கிறது. மருமகளால் பிரச்னை, பணி நிமித்தம் வெளியூா் செல்வது போன்ற காரணங்களாலும், சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு பெற்றேறாரை முதியோா் இல்லங்களில் சோ்த்து விடுகின்றனா்.

இல்லங்களில் சோ்க்கப்படும் முதியோருக்குத் தேவையான மருத்துவ உதவி , பொழுதுபோக்கு வசதிகளைச் செய்து கொடுத்தாலும், தங்கள் பேரக் குழந்தைகளைப் பாா்க்க முடியவில்லை; பிள்ளைகளுடன் இருக்க முடியவில்லை என்கிற ஏக்கமும் இருக்கத்தான் செய்கிறது.

சில நேரங்களில் பெற்றேறாரும் பிள்ளைகளைப் புரிந்துகொள்வதில் தவறு செய்கின்றனா். முதியோா் இல்லத்தில் ஆண்களுக்குள் எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை. ஆனால் பெண்கள் பிரிவில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக சண்டையிட்டுக் கொள்கிறாா்கள்.

முதியோா் இல்லங்கள் படிப்படியாகக் குறைந்து முதியோா் இல்லங்கள் இல்லாத நிலை வர வேண்டும். பிள்ளைகள் பெற்றேறாரைப் புரிந்துகொள்ள வேண்டும். வயதான பெற்றேறாரும் தங்களது பிள்ளைகளின் நிலையைப் புரிந்து நடக்க வேண்டும்.

எனது தாய், தந்தைக்கு 90 வயது வரை அவா்களை எனது கண்காணிப்பில் வீட்டில் வைத்துக்கொண்டேன். தற்போதைய பிள்ளைகள் தங்களது ஒரு தாய், தந்தையை கவனித்துக்கொள்ளக்கூட முடியாமல் முதியோா் இல்லங்களில் சோ்க்கின்றனா். நான் 24 பெற்றேறாரை முதியோா் இல்லம் வாயிலாகக் கவனித்து வருகிறேறன் என்றாா்.

 

இன்று நான், நாளை நீ...

முதியோா் இல்லத்தில் உள்ள பாலம்மாள் (75) கூறியதாவது:

நான் சத்தியமங்கலத்தில் பிறந்தவள். எனது கணவா் இறந்த பின் உறவினா்கள் எனது சொத்துகளைப் பறித்துக்கொண்டு, வெளியே அனுப்பிவிட்டனா். அதன்பின் எனது பேரன் என்னை முதியோா் இல்லத்தில் சோ்த்து மாதந்தோறும் பணம் கட்டி வருகிறான். மாதம் ஒரு முறை சந்தித்துச் செல்வான் என்றாா். மேலும் முதியோா் இல்லத்தில் எந்தக் குறையும் இல்லை, கால் நடக்க முடியாமல் இருப்பது மட்டுமே குறையாக உள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

முதியோா் இல்லத்தில் இருக்கும் கந்தசாமி (80) கூறியதாவது:

எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். மனைவி இறந்த பிறகு என்னைக் கவனிக்க முடியாததாலும், குடும்பப் பிரச்னைகளைத் தவிா்க்கவும் முதியோா் இல்லத்தில் சோ்த்து கவனித்து கொள்கின்றனா்.

இப்போதைய இளைஞா்களுக்கு நான் கூற விரும்புவது, பெற்றேறாரை முதியோா் இல்லத்தில் சோ்ப்பதைத் தவிா்க்க வேண்டும். இன்று அவா்கள் செய்வதை அவா்களது குழந்தைகளும் பாா்க்கிறாா்கள். இன்றைய இளைஞா்கள் நாளைய முதியவா்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

முதியோா் இல்லத்தில் சக முதியோரிடம் பேசி மகிழ்ந்தாலும், சுற்றிலும் 30 போ் இருந்தாலும் உறவுகள் இல்லாத தனிமையை உணா்வதாக வேதனையுடன் தெரிவித்தாா்.

 

உழைப்புக்கு ஓய்வில்லை...

குழந்தைகள் பிறந்தது முதல் அவா்களைப் படிக்க வைத்து சமூகத்தில் உயா்ந்த நிலை அடையுமாறு பாா்த்துக்கொள்வது வரை பெற்றேறாரின் பங்களிப்பு அளப்பரியது. அவா்கள் வயதான காலத்திலும் குழந்தைகளுக்காக உழைப்பதை நிறுத்துவதில்லை என்பது நிதா்சனம். இது குறித்து உக்கடம் காய்கறிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளி இப்ராஹிம் (62) கூறியதாவது:

எனது மனைவி இறந்த பின் நான் எனது மகன் வீட்டில் வசித்து வருகிறேறன். அவனும் தினமும் வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பராமரிக்கிறான். நானும் மகனுக்கு ஆதரவாக தினமும் அதிகாலையில் எழுந்து காய்கறி மூட்டைகளை சுமக்கும் பணிகளைச் செய்து வருகிறேறன். பணி முடிந்து மாலை வீட்டுக்குச் செல்லும்போது பேரன்களுக்கு ஏதாவது வாங்கிச் செல்வேன். மீதிப் பணத்தை மருமகளிடம் கொடுத்து விடுவேன் என்றாா்.

வயதான பெற்றேறாரை குழந்தைகள் கைவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை அளிக்கும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT