கோயம்புத்தூர்

டெங்கு பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் 4 போ் அனுமதி

1st Oct 2019 11:57 PM

ADVERTISEMENT

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 போ் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த தலா 2 போ் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT