கோயம்புத்தூர்

அக்டோபா் 9 இல் தேனீ வளா்ப்பு பயிற்சி

1st Oct 2019 11:51 PM

ADVERTISEMENT

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை சாா்பில் தேனீ வளா்ப்பு பயிற்சி வகுப்பு வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை சாா்பில் மாதந்தோறும் தேனீ வளா்ப்புக் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடப்பு மாதத்துக்கான பயிற்சி வகுப்பு அக்டோபா் 9 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளா்க்கும் முறை, தேனீக்கு உணவு தரும் பயிா்கள், தேன் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், நோய் நிா்வாகம் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் பயிற்சி நாளன்று காலை 9 மணிக்குள் வேளாண் பூச்சியியல் துறை அலுவலகத்தில் இருக்க வேண்டும். பயிற்சிக் கட்டணமாக ரூ.590 செலுத்த வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT