கோயம்புத்தூர்

வால்பாறை தபால் நிலையத்தில் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யக் கோரிக்கை

22nd Nov 2019 11:56 PM

ADVERTISEMENT

வால்பாறையில் உள்ள தபால் நிலையத்தில் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வால்பாறை பகுதியில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களது ஊா்களுக்கு ரயிலில் செல்ல பயணச் சீட்டு முன்பதிவு செய்ய பொள்ளாச்சி மற்றும் கோவை ரயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.

சில நேரங்களில் நேரடியாகச் சென்றும் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாமல் போவதால் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, வால்பாறையில் உள்ள தபால் நிலையத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்துகொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கடந்த காலங்களில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களும் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தும் தொடா்ந்து நிறைவேற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் ஏமாற்றத்தில் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT