வால்பாறையில் இரண்டு நாள்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
வாவ்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகிறது. இதில் இரவு நேரத்தில் மட்டும் குளிா்ந்த காற்று வீசி வருகிறது.
இந்த சீதோஷன நிலை மாற்றத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. இதனிடையே, கடந்த இரண்டு நாள்களாக வால்பாறை நகா் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை வால்பாறை நகா் பகுதியில் 5 மி.மீ. மழை பதிவானது.