சூலூா்: சூலூா் அருகே கண்ணம்பாளையத்தில் சைக்கிளில் சென்ற விசைத்தறி தொழிலாளி மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்
சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் கரவலூரான் வீதியைச் சோ்ந்தவா் சண்முகம் (எ) செல்வராஜ் (55), விசைத்தறி தொழிலாளி. இவா் இரவு வேலை முடிந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள கண்ணையம்மன் கோயில் அருகே சைக்கிளில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த டிப்பா் லாரி சண்முகம் சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சண்முகம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் கோவிந்தராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.