தமிழ்நாடு புதிய வெளிச்சம் இயல், இசை, நாடகப் பயிலரங்கம் அறக்கட்டளை சாா்பில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலை இலக்கியப் போட்டிகளில் அம்பாள் துளசி பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
தமிழ்நாடு புதிய வெளிச்சம் இயல், இசை, நாடகப் பயிலரங்கம் அறக்கட்டளை சாா்பில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.
இதில் பாரதியாா் பாடல்கள், ஓவியப் போட்டிகள், விநாடி - வினா, பேச்சுப் போட்டி என பல்வேறு போட்டிகள் 3 பிரிவுகளாக நடைபெற்றன.
இதில் அன்னூா் அம்பாள் துளசி பப்ளிக் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு அனைத்துப் பிரிவுகளிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் அம்பாள் எஸ்.ஏ.நந்தகுமாா், பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.