அன்னூா் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அன்னூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
அன்னூா் ஒன்றியத்தில் உள்ள 7 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 30 மாற்றுத் திறன் மாணவா்களுக்கு அன்னூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் 4 பிரிவுகளாக நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அன்னூா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சுப்பிரமணி பரிசுகளை வழங்கினாா். மேலும், போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியில், கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.