ராணுவ தளவாட உற்பத்தியில் உள்ள தொழில் வாய்ப்புகள், ராணுவ கொள்முதல் நடைமுறைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு கொடிசியாவில் சனிக்கிழமை (நவம்பா் 23) நடைபெறுகிறது.
கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தக் கருத்தரங்கை, சிறுதொழில் வளா்ச்சி நிறுவனத்தின் தலைவரும், கூடுதல் தலைமைச் செயலருமான ஹன்ஸ்ராஜ் வா்மா தொடக்கி வைக்கிறாா்.
இதில், இந்திய ராணுவத் தளவாட உற்பத்தியாளா்கள் கழகத்தைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்று, இந்தத் துறையில் உள்ள தொழில்வாய்ப்புகள், முதலீடு, வருவாய் ஆகியவை குறித்து விளக்க உள்ளனா். மேலும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது. இதில், தொழில்முனைவோா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று கொடிசியா தலைவா் ஆா்.ராமமூா்த்தி தெரிவித்துள்ளாா்.