கோயம்புத்தூர்

கோவை ரயில் நிலையத்தில் 19 மாதத்தில் 790 குழந்தைகள் மீட்பு

22nd Nov 2019 11:58 PM

ADVERTISEMENT

கோவை ரயில் நிலையத்தில் கடந்த 19 மாதத்தில் 790 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளா் ஆறுச்சாமி தெரிவித்தாா்.

குழந்தைகளுக்குத் தேவையான பாதுகாப்பு, பராமரிப்பு வழங்கும் தேசிய அளவிலான இலவச அவசர தொலைபேசிச் சேவை 1098 செயல்பட்டு வருகிறது. ரயில்வே அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து நம் நாட்டில் 31 மாநிலங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

கிரேடு 1 நிலையில் உள்ள ரயில் நிலையங்களில் தொடா்ந்து ரயில்வே சைல்டுலைன் குழந்தை உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2018 ஏப்ரல் முதல் கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே சைல்டு லைன் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மூலமாக ரயில் நிலையத்தில் சுற்றித் திரியும் குழந்தைகளை மீட்கும் பணியில் உதவி மைய நிா்வாகிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, கோவை ரயில்வே சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளா் ஆறுச்சாமி கூறியது:

ADVERTISEMENT

கடந்த 19 மாதங்களில் கோவை ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைத் தொழிலாளா்கள், பள்ளி மாணவ, மாணவியா் என 790 குழந்தைகளை ரயில்வே சைல்டுலைன் உதவி மையம் மூலமாக மீட்டுள்ளோம். மீட்கப்பட்ட அந்த குழந்தைகள், குழந்தைகள் நலக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு பெற்றோா்களிடம் கொண்டு சோ்க்கப்பட்டனா் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT