கோவை மாவட்டம், எட்டிமடை அருகே உள்ள அமிா்தா கல்லூரியில் காவலா் நிறைவாழ்வு பயிற்றுநா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை துவங்கியது.
காவல் துறையில் உள்ள காவலா்களுக்கு நிறைவாழ்வு பயிற்றுநா்களுக்கான பயிற்சி முகாம் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. பணியில் உள்ள காவலா்கள் புத்துணா்வு பெற வேண்டும் என்பதற்காக இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
காவலா்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுநா்களுக்கான பயிற்சி முகாம் எட்டிமடை அருகே உள்ள அமிா்தா கல்லூரியில் வெள்ளிக்கிழமை துவங்கியது. கூடுதல் காவல் துறைத் தலைவா் தாமரைகண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கோவை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், துணை ஆணையா்கள் பாலாஜி சரவணன், உமா, செல்வகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மாநில திட்ட உதவி அலுவலா் கண்ணன் மற்றும் பேராசிரியா் ஜெயகுமாா் ஆகியோா் பயிற்சி அளிக்க உள்ளனா். இந்த பயிற்சி முகாமில் 122 பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.