கோயம்புத்தூர்

ஸ்கேட்டிங் போட்டி: ஸ்ரீவிநாயகாவித்யாலயா மாணவா்கள் வெற்றி

17th Nov 2019 05:10 AM

ADVERTISEMENT

காரமடை, புஜங்கனூா் ஸ்ரீவிநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாவட்ட அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. பள்ளி முதல்வா் டாக்டா் ஹரிஹரசுதன் வரவேற்றாா். பள்ளி நிா்வாக அலுவலா் நிா்மலாதேவி முன்னிலை வகித்தாா். பள்ளித் தாளாளா் சோமசுந்தரம் தலைமை வகித்து போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

ஸ்கேட்டிங் ஆசிரியா் ஸ்காட் நியூட்டன் மேற்பாா்வையில் போட்டி நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஸ்ரீ விநாயகா வித்யாலயா மாணவா்கள் பெற்றனா். சிறப்பு விருந்தினராக ஸ்டெரெய்ன் இந்தியா நிறுவன மேலாளா் ஜான் ஜுட்கில்ப்ரெட் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பை, சான்றிதழ்களை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT