கோயம்புத்தூர்

விவசாயிகள் கவனத்துக்கு...

17th Nov 2019 05:09 AM

ADVERTISEMENT

கோவை மாவட்ட விவசாயிகள் தங்களுக்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம் உள்ளிட்ட வருவாய்த் துறை ஆவணங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 19) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் விவசாயிகள் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து கடன் பெறுவதற்கும் சிட்டா, அடங்கல், நில வரைபடம், குறு, சிறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன.

இந்த சான்றிதழ்களை விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்காக மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வருவாய்த் துறையின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்த முகாம்களில் விவசாயிகள் பங்கேற்று தங்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT