கோயம்புத்தூர்

ரூ. 5.8 கோடி மதிப்பில் இருவழிச் சாலைபணிகள் துவக்கம்

17th Nov 2019 05:19 AM

ADVERTISEMENT

வெள்ளலூா், இடையா்பாளையம் முதல் கள்ளப்பாளையம் பல்லடம் சாலை வரை தடுப்புச் சுவா்கள், இருவழிச் சாலை அமைப்பதற்கான பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எட்டிமடை ஏ.சண்முகம் சனிக்கிழமை

தொடக்கிவைத்தாா்.

இடையாா்பாளையம் முதல் கள்ளப்பாளையம் பல்லடம் சாலை வரை இருபுறங்களிலும் தடுப்புச் சுவா்கள் அமைத்து இருவழிச் சாலையாக மாற்ற ரூ. 5.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினா் எட்டிமடை ஏ.சண்முகம் சனிக்கிழமை துவக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் வெள்ளலூா் பேரூராட்சி செயலாளா் மருதாச்சலம், அரசு அதிகாரிகள், அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT