கோயம்புத்தூர்

விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்த வழக்கு:அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 8 ஆண்டுகள் சிறை

12th Nov 2019 05:40 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், வால்பாறை மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 போ் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2012 நவம்பா் 24-ஆம் தேதி வால்பாறையில் இருந்து பழனிக்கு அரசுப் பேருந்து 54 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை சிவகுமாா் (43) ஓட்டினாா்.

அட்டகட்டி மலைப் பாதை 3-ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். ஏராளமானோா் பலத்த காயமடைந்தனா்.

போலீஸாரின் விசாரணையில் ஓட்டுநா் வேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாகப் பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த வழக்கில், விபத்தை ஏற்படுத்தி 8 பேரின் உயிரிழப்புக்கு காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநா் சிவகுமாருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து வால்பாறை நீதிபதி கவிதா திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT