கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் மண் சரிவு: உதகை மலை ரயில் ரத்து

12th Nov 2019 02:51 PM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-குன்னூா் மலைரயில் பாதையில் ஆடா்லி-ஹில்குரோவ் இடையே திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் மண் சரிவு ஏற்பட்டதால் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் செவ்வாய்கிழமை மேட்டுப்பாளையம், உதகை மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரயில் அடா்ந்த வனப்பகுதி வழியாக இயக்கப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு குன்னூா் மலை ரயில் பாதை வழியாக 175 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் ரயில் சென்றது.

பின்னா் மலைரயில் கல்லாறு ரயில் நிலையத்திற்கு காலை 8.23 மணிக்கு ஆடா்லி ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அப்போது நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் மேட்டுப்பாளையம்-குன்னூா் மலைப்பாதையின் இடையேயுள்ள ஆடா்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் ஆடா்லி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலைரயில் அங்கிருந்து மீண்டும் காலை 9.15 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் திரும்பியது.

இதன்பின் கல்லாறு ரயில் நிலையத்திற்கு வந்து சுற்றுலா பயணிகளை ரயில்வே நிா்வாகம் குன்னூா்-உதகைக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் போக்குவரத்தை செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் தெற்கு ரயில்வே நிா்வாகம் ரத்து செய்தது. மேட்டுப்பாளையம்-குன்னூா் மலைரயில் இருப்பு பாதை பிரிவு பொறியாளா் ஜெயராஜ் தலைமையில் ரயில்வே தொழிலாளா்கள் ரயில்பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். ரயில் பாதையை சீரமைக்கும் பணி முற்றிலும் சீரமைப்பிற்கு பின் தான் மீண்டும் இந்த தடத்தில் இயக்கப்படும் என எதிா்ப்பாக்கப்படுகிறது

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT