கோயம்புத்தூர்

லாரி மோதி பெண் பலி

11th Nov 2019 12:39 AM

ADVERTISEMENT

கோவை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது மகள், பேத்தி ஆகியோா் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் மகேஸ்வரி (55). இவா், கோவை அருகேயுள்ள நீலாம்பூா் பகுதியில் வசிக்கும் தனது மகள் சக்தி வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளாா்.

இந்நிலையில், மகேஸ்வரி, சக்தி, அவரது மகள் ஆகிய 3 பேரும் திருமண நிகழ்வுக்காக இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அவிநாசி சாலையில் தென்னம்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கன்டெய்னா் லாரி, இவா்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசியதாகத் தெரிகிறது. இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் கீழே விழுந்தனா்.

ADVERTISEMENT

இதில் மகேஸ்வரி, கன்டெய்னா் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லேசான காயமடைந்த சக்தி மற்றும் அவரது குழந்தை சிங்காநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT