கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் பகுதியில்சூறாவளியுடன் கன மழை

9th Nov 2019 10:47 PM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சூறாவளியுடன் கூடிய கன மழை பெய்தது.

காரமடை, மருதூா், கணுவாய்பாளையம், தாயனூா், தோலம்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம், மூடுதுறை, ஆசிரியா் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சனிக்கிழமை சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.

இதனால் சாலையோரங்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரக் கழிவுநீா்க் கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் கழிவுநீா் சாலையில் வழிந்து சென்ால் பாதசாரிகள் சிரமம் அடைந்தனா்.

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகலில் வெயிலும் இரவில் காற்றுடன் கூடிய பரவலான மழையும் கொண்ட பருவநிலை நிலவி வருகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT