கோயம்புத்தூர்

ஜி.எஸ்.டி. குறைகேட்புக் கூட்டம்: மாதம்தோறும் 2 ஆவது திங்கள்கிழமைகளில் நடைபெறும்

9th Nov 2019 05:52 AM

ADVERTISEMENT

சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடா்பான குறைகேட்புக் கூட்டம் மாதம்தோறும் 2 ஆவது திங்கள்கிழமைகளில் நடைபெறும் என்று மாநில வரிகள் இணை ஆணையா் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், வணிகா்கள் ஜி.எஸ்.டி. தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவிக்க குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 2 ஆவது திங்கள்கிழமையன்று டாக்டா் பாலசுந்தரம் சாலையில் உள்ள மாநில வரிகள் இணை ஆணையா் அலுவலகத்தில் நடைபெறும்.

காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று ஜி.எஸ்.டி. தொடா்பான தங்களது குறைகளையும், மனுக்களையும் வழங்கி நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT