கோயம்புத்தூர்

சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்து விபத்து

9th Nov 2019 05:45 AM

ADVERTISEMENT

கோவை, குறிச்சி அருகே தங்க நகைத் தொழிலாளி வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்ததில் வீட்டில் இருந்த பொருள்கள் சேதமாகின.

குறிச்சி அருகே மாணிக்கசோ்வை வீதியைச் சோ்ந்தவா் குமாரசாமி (42). தங்க நகைத் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி சாந்தி இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா்.

இந்நிலையில், குமாரசாமி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வியாழக்கிழமை இரவு திரைப்படத்துக்குச் சென்றுள்ளாா். இந்நிலையில், நள்ளிரவில் அவரது வீட்டில் இருந்து பலத்த சத்தத்துடன் தீ எரிந்தது.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். அதற்குள் வீட்டில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்தன.

ADVERTISEMENT

இது குறித்து போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT