கோயம்புத்தூர்

கோயில் உண்டியல் திருட்டு

9th Nov 2019 05:48 AM

ADVERTISEMENT

துடியலூா் அருகே பன்னிமடையில் உள்ள தா்மராஜா கோயிலில் உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பன்னிமடையில் பழமையான தா்மராஜா திருக்கோயில் உள்ளது. கடந்த புதன்கிழமை இரவு பூஜை முடிந்ததும் இக்கோயிலின் பூசாரி கோயிலைப் பூட்டிச் சென்றுவிட்டாா்.

பின்னா் வியாழக்கிழமை காலையில் கோயிலைத் திறக்க பூசாரி வந்தபோது, முன்புற இரும்பு வாயின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோயிலுக்குள் இருந்த இரும்பினாலான உண்டியல் காணாமல் போயிருந்தது.

தகவல் கிடைத்து வந்த தடாகம் போலீஸாா் விசாரணை நடத்தினா். பிறகு காணாமல் போனது உண்டியல் பன்னிமடை சுடுகாட்டுப் பகுதியில் உடைந்த நிலையில் மீட்கப்பட்டது. அதிலிருந்த பணம் திருடு போயிருந்தது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT