கோயம்புத்தூர்

காரமடை ரங்கநாதா் கோயிலில் ஐப்பசி மாத ஏகாதசி விழா

9th Nov 2019 05:52 AM

ADVERTISEMENT

காரமடை ரங்கநாதா் கோயிலில் ஐப்பசி மாத சுக்லபட்ச ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி உற்சவா் சன்னிதியில் புன்னியாக வசனம், கலசம் ஆவாஹனம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு பால், தயிா், தேன், நெய், இளநீா், சந்தனம், மஞ்சள், மூலிகைத் திரவியங்களால் ஸ்தபனத் திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடா்ந்து மேளதாளங்கள் முழங்க, கோயிலின் உள் பிரகாரத்தில் ரங்கநாதா் உலா வந்தாா். பின்னா் தேவியருடன் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து சாற்றுமுறை சேவிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT