கோயம்புத்தூர்

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி அறிமுகம்

9th Nov 2019 05:47 AM

ADVERTISEMENT

ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளைக் காப்பாற்ற புதிய கருவியை கோவை தொழிலதிபா் உருவாக்கியுள்ளாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 2 வயது சிறுவன் சுஜித் வில்சன், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 3 நாள்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து ஆழ்துளைக் கிணறு மரணங்களைத் தடுப்பதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீட்புக் கருவியை கண்டறிபவா்களுக்கு பரிசுத் தொகையை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் டி.நவனீத், இதற்கான புதிய கருவியை வடிவமைத்துள்ளாா். செயற்கை கையுடன் இரு கயிறுகள் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி மூன்று அங்குலம் அகலம் கொண்டது. இதனால் சிறிய ஆள்துளைக் கிணற்றுக்குள்ளும் சென்று குழந்தையை மீட்கும் திறன் கொண்டது.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தைகளின் கை எப்போதுமே மேல் நோக்கிதான் இருக்கும் என்பதால் இந்த செயற்கை கையை உள்ளே செலுத்தும்போது, அது குழந்தையின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும். அப்போது அந்த இரு கயிறுகளின் மூலம் குழந்தையின் கையில் முடிச்சு போட்டு எளிதாக மேலே தூக்கிவிடலாம். இந்தக் கருவி 300 அடி ஆழம் வரை செல்லக் கூடியது.

ADVERTISEMENT

கருவி சிறியதாக இருப்பதால் மீட்புப் பணியின்போது, மண் சரிவு ஏற்படாது. மேலும் இது எளிய வடிவில் இருப்பதால் யாா் வேண்டுமானாலும் மீட்புப் பணியில் ஈடுபட முடியும் என்று கூறும் நவனீத், தனது கண்டுபிடிப்பை கல்வீரம்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் அண்மையில் செயல்முறை விளக்கம் அளித்துள்ளாா்.

மேலும், சிறுவன் சுஜித்தின் நினைவாக தனது கண்டுபிடிப்புக்கு ஏஞந (ஏஅசஈந ஞஊ நமஒஐபஏ) என்று பெயா் சூட்டியிருப்பதாகக் கூறும் நவனீத், இந்தக் கருவியை விட நூறு மடங்கு கூடுதல் செயல்திறன் கொண்ட கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்தப் பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும் என்றாா்.

மேலும், தனது கண்டுபிடிப்பை ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கும் குழந்தைகளை மீட்கும் தன்னாா்வக் குழுக்களுக்கு இலவசமாக வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT