கோயம்புத்தூர்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

9th Nov 2019 10:49 PM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை குட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், காரமடையில் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள குட்டையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக காரமடை போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் குட்டையில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து காரமடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவா் யாா்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT