கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை மாநகராட்சி, 81 ஆவது வாா்டு வெரைட்டிஹால் ரோடு பகுதியில் மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 84 ஆவது வாா்டு கெம்பட்டி காலனி பகுதியிலுள்ள முதியோா் தங்கு விடுதியில் குடிநீா் விநியோகம், உணவு, அடிப்படை வசதிகள் குறித்தும், 25 வாா்டு சுக்கிரவாா்பேட்டையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணிகள் மற்றும் உக்கடத்தில் நடைபெற்று வரும் ஆடு அறுவைமனையில் பணிகளையும் ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின் போது துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி உள்பட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.