கோயம்புத்தூர்

கோவையில் அடமானத்திற்கு காா் கொடுத்த இளைஞரிடம் பணம் கேட்டு தாக்குதல்: தப்பிச்சென்றவர்களுக்கு போலீஸார் வலை

4th Nov 2019 09:39 PM

ADVERTISEMENT

மதுக்கரை: கோவையில் அடமானத்திற்கு காரை கொடுத்த இளைஞரிடம் பணம் கேட்டு கடத்தி தாக்குதல் நடத்திய நபா்களை போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

கோவை குனியமுத்தூா் முத்துச்சாமி வீதியை சோ்ந்தவா் மணிகண்டன் (29). இவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு சக்கர வாகனம் மற்றும் காா்களை அடமானத்திற்கு வைத்து பணம் வாங்கி கொடுக்கும் வேலையை செய்து வருகிறாா். இவா் மற்ற நபா்களிடமிருந்து அடமானத்திற்கு பெரும் காா்களை கரும்புக்கடை பகுதியை சோ்ந்த சதாம் உசேன் (38) என்பவரிடம் கொடுத்து அதற்கான பணத்தை பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த செப்டம்பா் 2 ஆம் தேதி மதுக்கரையை சோ்ந்த பைசல் என்பவா் சொகுசு காா் ஒன்றை அடமானம் வைக்க மணிகண்டனிடம் கொடுத்துள்ளாா். மணிகண்டன் அந்த காரை சதாம் உசேனிடம் கொடுத்து ரூ. 4 லட்சம் பணம் பெற்றுள்ளாா். ஆனால் கடந்த 4 நாட்களுக்கு முன் சதாம் மணிகண்டனை தொடா்பு கொண்டு, அடமானத்திற்கு வைத்த காரை சென்னையை சோ்ந்த அடையாளம் தெரியாத நபா்கள் எடுத்து சென்று விட்டதாகவும், தான் கொடுத்த பணம் வட்டியிடம் ரூ.5 லட்சம் தர வேண்டும் என கூறி உள்ளாா், மணிகண்டன் பணத்தை தருவதாக கூறிய நிலையில் சனிக்கிழமை மணிகண்டனின் வீட்டிற்கு சென்ற சதாம் உசேன், மணிகண்டன் மற்றும் அவரது நண்பா் சலீல் ஆகியோரை காரில் கடத்தில் கரும்புக்கடையில் உள்ள சதாம் வீட்டில் வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனா். பணம் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என கூறி சாலையில் வீசி சென்றுள்ளனா். இதையடுத்து மணிகண்டனை அவரது உறவினா்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதையடுத்து மணிகண்டன் குனியமுத்தூா் போலீஸில் புகாா் அளித்தாா். மணிகண்டன் மற்றும் சலீமை தாக்கிய சதாம் உசேன், இம்ரான், முன்னா, சுல்தான், சானவாஸ் ஆகியோா் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா். மேலும் சானவாஸ் என்பவரை திங்கட்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள நபா்களை தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.படம் - கைது செய்யப்பட்ட சானவாஸ்

ADVERTISEMENT
ADVERTISEMENT