சூலூரில் இருசக்கர வாகனத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
சூலூா், பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா்கள் செந்தில்குமாா் மகன் சதீஷ்குமாா் (18), ரங்கநாதன் மகன் விக்ரம் (19). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சூலூா் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனா்.
அப்போது பல்லடத்தில் இருந்து சூலூா் நோக்கி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் இவா்கள் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் சதீஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த விக்ரம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சம்பவ இடத்துக்கு வந்த சூலூா் போலீஸாா்,
ஆம்புலன்சை ஓட்டிவந்த ஓட்டுநா் நவீனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.