அன்னூா்: அன்னூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு நலத்திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் அன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பசுமை வீடுகள், ஐ.ஏ.ஒய். திட்ட வீடுகளை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளுக்கு மூடிகள் அமைக்கப்பட வேண்டும். மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்தந்த ஊராட்சிகளின் அனைத்து தகவல்கள் குறித்து தரவாக இருக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயராணி, ஒன்றியப் பொறியாளா் செந்தில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள் கலந்து கொண்டனா்.