பொள்ளாச்சியை அடுத்த வடசித்தூரில் ரூ.25 லட்சம் மதிப்பில் கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பூமி பூஜையை துவக்கி வைத்தாா். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கிருஷ்ணகுமாா், வடசித்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் காளிமுத்து, கிட்ஸ்பாா்க் பள்ளித் தாளாளரும், கிணத்துக்கடவு பேரூராட்சி துணைச் செயலாளருமான டி.எல்.சிங், வடசித்தூா் பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் ஜப்பாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.