கோயம்புத்தூர்

குடியிருப்பு அருகில் உள்ள கிணற்றை மூடபொதுமக்கள் கோரிக்கை

1st Nov 2019 08:51 AM

ADVERTISEMENT

சூலூா் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள பாழடைந்த கிணற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காங்கேயம்பாளையம், ராஜ் தானி காா்டன் குடியிருப்புப் பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் பூங்கா அருகே பயன்படுத்தாத கிணறு ஒன்று உள்ளது. இதனைச் சுற்றிலும் தற்போது குடியிருப்புகள் அமைந்துள்ளன.

சிறுவா்கள் விளையாட செல்லும்போது இந்த கிணற்றில் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே பயன்பாட்டில் இல்லாத இந்த கிணற்றை மூடக் கோரி இப்பகுதி மக்கள் காங்கேயம்பாளையம் ஊராட்சி செயலரிடம் மனு அளித்தனா்.

மேலும் இந்த கிணற்றால் டெங்கு கொசு, விஷ ஜந்துகள் குடியிருப்புகளுக்குள் வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். எனவே உடனடியாக இந்த கிணற்றை மூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT