கோயம்புத்தூர்

உக்கடம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை

1st Nov 2019 08:56 AM

ADVERTISEMENT

கோவை, உக்கடம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 2) தற்காலிகமாக மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தற்காலிக மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: வெரைட்டி ஹால் பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மாா்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், ராமநாதபுரம், சுங்கம், ஸ்டேட் வங்கி சாலை, ஆட்சியா் அலுவலகம், ரயில் நிலைய பகுதிகள், ரேஸ்கோா்ஸ், அரசு மருத்துவமனை, லாரி பேட்டை.

ADVERTISEMENT
ADVERTISEMENT