அன்னூா்: அன்னூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு அலுவலா்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.
அன்னூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்சிக்கு கோவை வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப மேலாளா் நாகராஜ் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளா் மாசாணம் முன்னிலை வகித்தாா்.
இந்த நிகழ்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் பணியாற்றும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் லஞ்சம் வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம் என்றும், நோ்மையாக பணிாற்றுவோம் என்றும் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.இந் நிகழ்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.