ஒரே நேரத்தில் 3 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கேஎம்சிஹெச் சாதனை

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக சிறுநீரக பகிர்வு மூலம் ஒரே நேரத்தில் மூன்று சிறுநீரக மாற்று

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக சிறுநீரக பகிர்வு மூலம் ஒரே நேரத்தில் மூன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் கேஎம்சிஹெச் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கேஎம்சிஹெச் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக பகிர்வு அறுவை சிகிச்சையில், முதலாவது குடும்பத்தில் இரு சகோதரிகள். இவர்கள் இருவருக்குமான ரத்த வகை ஒத்துப்போனது. ஆனால், கிராஸ் மேட்ச் முடிவு பாசிடிவ் ஆக இருந்ததால் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. இரண்டாவது குடும்பத்தில் ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும். இவர்களுக்கும் கிராஸ் மேட்ச் பாசிடிவ் ஆக இருந்தது. 
வெற்றிகரமான மாற்று அறுவை சிகிச்சைக்கு இந்த கிராஸ் மேட்ச் நெகடிவ்வாக இருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கிராஸ் மேட்ச் பாசிட்டிவாக இருந்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்டால், நோயாளியின் நோய் எதிர்ப்பு அமைப்பானது மாற்றிப் பொருத்திய சிறுநீரகத்தைத் தாக்கி அதற்குச் சேதத்தை ஏற்படுத்தும். மூன்றாவது குடும்பத்தில் கணவன், மனைவி இடையே கிராஸ் மேட்ச் நெகடிவ்வாக இருந்தது. ஆனால், இருவரது ரத்த வகையும் ஒத்துப்போகவில்லை என்பதால் மூன்று அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது.
 இவர்களுக்கு சிறுநீரக பகிர்வு முறையை, கேஎம்சிஹெச் மருத்துவமனையின் சிறுநீரக மற்றும் கணைய மாற்று நிபுணர் மருத்துவர் மங்களகுமார் பரிந்துரைத்தார். இங்கிலாந்து நாட்டின் பரிம்மிங்ஹாம் பல்கலைக்கழக உதவியுடன் நோய் எதிர்ப்பு திறன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி அவர்களது வயது, சிறுநீரக செயல்பாடு ஆகியவற்றைப் பொருத்து பொருத்தமானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 
இரு கொடையாளிகளுக்கும், இரு பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சைகள் செய்திட 4 அறுவை சிகிச்சை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. மருத்துவர் மங்களகுமார் தலைமையில் மார்ச் 25 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 4 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது.
 3 கொடையாளிகள், 3 பயனாளிகள் கொண்ட  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடப்பது தென்னிந்தியாவிலேயே இதுவே முதன்முறை. வெவ்வேறு குடும்பத்தினர் இதுபோன்று சிறுநீரகத்தை பரஸ்பரம் தானமளிப்பதால் சிறுநீரக சிகிச்சைக்கான செலவு குறையும். அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழுவினருக்கு கேஎம்சிஹெச் தலைவர் மருத்துவர் நல்லா ஜி. பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com