திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

DIN | Published: 01st June 2019 08:51 AM

வால்பாறையில் வன விலங்குகளை காண இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகளில் வாகனங்களில் பயணம் செல்லக்கூடாது என்று வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வன விலங்குகளை காட்டுவதாகக் கூறி சிலர் இரவு நேர ரோந்து என்று வாகனங்களில் அழைத்து செல்கின்றனர். சுமார் 2 மணி நேரம் பயணம் மேற்கொள்வதற்கு கூடுதல் பணம் வசூலிப்பதாகத் தெரியவந்துள்ளது. 

இதில் சில சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளை துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்வதோடு சாலைகளில் மது அருந்தும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். 

எனவே, வால்பாறை பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்ல இரவு நேரத்தில் செல்ல தடைவிதிக்கப்படுவதோடு மீறிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அழைத்து செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சமத்துவபுரத்தில் பெரியார் சிலை பீடத்தை சீரமைக்க கோரிக்கை
கருணாநிதி கல்லூரி- எல் & டி நிறுவனம் இடையே புரிந்துணர்வு
பாகிஸ்தான் ஆதரவுக் குழுக்களுடன் தொடர்பு: மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை
சாய் சேவா பரிவார் அமைப்பு கொடி அறிமுக விழா
ஹிந்தி மொழி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்: மாதர் சம்மேளன மாநாட்டில் தீர்மானம்