கோயம்புத்தூர்

வால்பாறை பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

31st Jul 2019 09:29 AM

ADVERTISEMENT

வால்பாறை வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி, அதிக மதிப்பெண் பெற கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 தற்போது வாரந்தோறும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும், 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரா.முருகன் திடீரென ஆய்வு செய்தார். வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசியர்களின் வருகையை காலை 8.30 மணிக்கே சென்று கண்காணித்து, தாமதமாக வந்த ஆசிரியர்களை கண்டித்தார். இதேபோல சிறப்பு வகுப்புகள் குறித்து கோப்புகளை ஆய்வு செய்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT