கோயம்புத்தூர்

வாகனம் திருட முயன்றவர் கைது

31st Jul 2019 09:32 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (36). இவர் காரமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கண்ணார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்றார். அப்போது மருத்துவமனை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.
 பின்னர் திரும்பிவந்தபோது சரவணகுமாரின் இருசக்கர வாகனத்தை ஒரு இளைஞர் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். இதனைப் பார்த்த சரவணகுமார் பொதுமக்களின் உதவியுடன் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, காரமடை போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த இளைஞர் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT