கோயம்புத்தூர்

சிஐடியூ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

31st Jul 2019 09:33 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ தொழிலாளர்கள் துடியலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரு நிறுவன  நலனுக்காக பொதுத் துறை நிறுவனங்களை விற்கக் கூடாது, தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தக் கூடாது, தொழிற்சங்க உரிமையை பறிக்கக் கூடாது, எளிய மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும், சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கக் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க பொதுச் செயலாளர் சி.துரைசாமி தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, சிஐடியூ மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுசாமி, என்ஜினீயரிங் சங்கத் தலைவர் வி.பெருமாள், பொருளாளர் ஏ.ஜி.சுப்பிரமணி, ஆர்.கேசவமணி, கே.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர்.  இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT