மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு, கடந்த 23 ஆம் தேதி பூச்சாட்டப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர்.
இதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.