கோயம்புத்தூர்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

30th Jul 2019 09:12 AM

ADVERTISEMENT

மத்திய அரசு சார்பில் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 2019-20 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிப் படிப்பு உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி படிப்பவர்களுக்கு தகுதி, வருவாய் அடிப்படையில் பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறன்றன.
 பள்ளிப் படிப்பு உதவித் தொகைக்கு அக்டோபர் 10 ஆம் தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்பு உதவித்தொகைக்கு ஆக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  மாணவர்கள் விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து புகைப்படத்தை இணைத்து கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்காத இணையதள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
 கல்வி நிலையங்கள் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் உடனுக்குடன் சமர்ப்பிக்க வேண்டும். 
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள், இதர நிபந்தனைகள் உள்ளிட்ட விவரங்கள்  h‌t‌t‌p://‌w‌w‌w.​b​c‌m​b​c‌m‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/‌w‌e‌l‌f‌s​c‌h‌e‌m‌e‌s‌m‌i‌n‌o‌r‌i‌t‌i‌e‌s.‌h‌t‌m என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
 இதன் வழிகாட்டி நெறிமுறைகள் ‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌m‌i‌n‌o‌r‌i‌t‌y​a‌f‌f​a‌i‌r‌s.‌g‌o‌v.‌i‌n/‌s​c‌h‌e‌m‌e‌s என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்புக்கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT