உலக புலிகள் தின விழாவையொட்டி வால்பாறையில் புலிகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் ஜூலை 29ஆம் தேதி உலக புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வால்பாறை வனச் சரகம் மூலம் பேரணி நடத்தப்பட்டது. வால்பாறை அரசுக் கல்லூரியில் நடைபெற்ற இப்பேரணியை வனச் சரக அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் "புலிகளை காப்போம்' என முழக்கமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அரசுக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குணசுந்தரி, பேராசிரியர் பெரியசாமி, வனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.