கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் கோவை, பேரூர், சர்க்கார் சாமகுளம், பொள்ளாச்சி ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. மொத்தம் 26 பணியிடங்கள் இருந்த நிலையில் ஏராளமான பணியாளர்கள் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான இடங்களைத் தேர்வு செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் சான்றிதழ்கள் வழங்கினார்.