மேட்டுப்பாளையம் அருகே உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வன பத்திரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழாவுக்கான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நான்காம் நாளான வெள்ளிக்கிழமை ஆடிக்குண்டம் திருவிழா தடையின்றி நடைபெற வேண்டி லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் கோயில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.