பொள்ளாச்சி சுற்றுப் வட்டாரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1,950 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி நேதாஜி சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காளியண்ணன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நெகமம், வடசித்தூர், பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1,950 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் ரவிக்குமார், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி, அதிமுக நிர்வாகிகள் மூசா, சாந்தலிங்ககுமார், வழக்குரைஞர் தனசேகர், நீலகண்டன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவைத் தலைவர் வெள்ளை நடராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.