கோயம்புத்தூர்

கோவையில் 2 இடங்களில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்த முயற்சி: தடுக்க வந்த காவலாளிக்கு அரிவாள் வெட்டு

18th Jul 2019 08:52 AM

ADVERTISEMENT

கோவையில் இருவேறு இடங்களில் வீட்டில் இருந்த சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற நிலையில், இதனை ஒரு இடத்தில் தடுக்கச் சென்ற காவலாளி அரிவாளால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.
 கோவை, ராம் நகர் சரோஜினி வீதியைச் சேர்ந்தவர் லிஜோ சுங்கத். நகைக் கடை உரிமையாளர்.
 இவரது வீட்டில் உள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை இரவு வெட்ட முயற்சித்துள்ளனர். சப்தம் கேட்டு விழித்துக்கொண்ட காவலாளி துரைசாமி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் துரைசாமியை கையில் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதையடுத்து அப்பகுதியினர் துரைசாமியை மீட்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக லிஜோ சுங்கத் அளித்த புகாரின்பேரில் காட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 மற்றொரு சம்பவம்
 கோவை, சாய்பாபா காலனி சின்னம்மா வீதியைச் சேர்ந்தவர் தாமரைக் கண்ணன். இவரது வீட்டில் சந்தன மரம் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டுக்குள் புதன்கிழமை இரவு நுழைந்த இருவர் மரத்தை வெட்ட முயற்சித்துள்ளனர். சப்தம் கேட்டு தாமரைக் கண்ணன் வெளியே வந்து பார்த்தபோது இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். இந்தச் சம்பவம் தொடர்பாக தாமரைக் கண்ணன் அளித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT