கோயம்புத்தூர்

சூலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

16th Jul 2019 09:30 AM

ADVERTISEMENT

சூலூர் அரசு மருத்துவமனை அருகே இந்து முன்னணியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இந்து முன்னணி நகரச் செயலாளரை மர்ம நபர்கள் வெட்டியதால் காயமடைந்தவரைப் பார்க்கச் சென்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை போலீஸார் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து சூலூரில் இந்து முன்னணி திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கைது செய்யப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், இந்து முன்னணி பிரமுகரை வெட்டிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT